36 ஆண்டுகளுக்கு பின்.. தகர்ந்தது இந்தியாவின் கனவு!
பிரேசில் ஒலிம்பிக்கில் பங்கேற்க தயாராக இருந்த இந்திய தடகள வீரர் தரம்பிர் சிங் ஊக்கமருந்து சோதனையில் தோல்வியடைந்துள்ளார்.
இவர் கடந்த யூலை மாதம் நடந்த இந்தியன் கிராண்ட்பிரிக்ஸ் தடகள போட்டியில் 200 மீற்றர் ஓட்டத்தில் இலக்கை 20.45 வினாடிகளில் கடந்து ஒலிம்பிற்கு தகுதி பெற்றார்.
இதன் மூலம் 200 மீற்றர் ஓட்டப் பிரிவில் 36 ஆண்டுகளுக்கு பின் ஒலிம்பிற்கு தகுதி பெற்ற இந்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்நிலையில் தேசிய ஊக்கமருந்து சோதனை மையம் இவரிடம் நடத்திய பரிசோதனையில் ’பாசிட்டிவ்’ வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனையடுத்து நேற்று காலை ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பதற்காக பிரேசில் புறப்பட தயராக இருந்த தடகள வீரர் தரம்பிர் சிங்கின் பயணம் ரத்து செய்யப்பட்டது.
ஏற்கனவே ஊக்கமருந்து விவகாரத்தில் சிக்கிய நரசிங் யாதவ், இந்தர்ஜீத் சிங் பட்டியலில் தற்போது தரம்பிர் சிங்கும் இணைந்துள்ளார்.