3 வினாடியில் வெற்றியை சூறையாடிய ஜேர்மனி: அதிர்ச்சியில் உறைந்த இந்திய வீரர்கள்
ரியோ ஒலிம்பிக்கில் இன்று ஆண்கள் ஹொக்கியில் நடந்த லீக் போட்டியில், கடைசி வினாடியில் கோல் அடித்து இந்தியாவை வீழ்த்தியது ஜேர்மனி.
ஆண்கள் ஹொக்கியில் இன்று பி பிரிவில் நடந்த லீக் போட்டியில் இந்தயா, ஜேர்மனி அணிகள் மோதின.
15 நிமிடம், 15 நிமிடம் என மொத்தம் நான்கு பாதிகளாக நடைபெற்ற போட்டியின் முதல் பாதி முடிவில், இரு அணியினரும் கோல் அடிக்காததால் ஆட்டம் சம நிலையில் இருந்தது.
இரண்டாவது பாதியின் 18வது நிமிடத்தில் ஜேர்மனி வீரர் நிக்லஸ் வாலன் முதல் கோல் அடித்தார். இதைதொடர்ந்து 23வது நிமிடத்தில் இந்தியா வீரர் ருபிந்தர் பால் சிங் பெனல்டி கார்னர் வாய்பை கோலாக மாற்றினார்.
இதன் மூலம் ஆட்டம் 1-1 என சம நிலையை எட்டியது. மூன்றாவது பாதியிலும் இதே நிலை ஏற்பட, கடைசி மற்றும் நான்காவது பாதியில் இரு அணி வீரர்களும் கோல் அடிக்க கடுமையாக போராடினர்.
இந்நிலையில் போட்டியின் முழு நேரம் முடிய 3 வினாடிகள் இருந்த நிலையில், ஜேர்மனி வீரர் கிறிஸ்டோபர் கோல் எதிர்பாராத விதமாக கோல் அடித்தார். இதனால் இந்திய வீரர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர்.
ஆட்ட நேர முடிவில் ஜேர்மனி அணி 2-1 என்ற கோல் கணக்கில் இந்திய அணியை வீழ்த்தி வெற்றிப்பெற்றது.
இதன் மூலம் ஜேர்மனி அணி 6 புள்ளிகள் பெற்று பி பிரிவில் முதல் இடத்திற்கு முன்னேறியது. இந்திய அணி 3 புள்ளிகளுடன் நான்காவது இடத்தில் உள்ளது.
நாளை இந்திய நேரப்படி 7.30 மணிக்கு நடக்கும் லீக் போட்டியில் இந்திய அணி, அர்ஜென்டீனா அணியை சந்திக்கிறது.