3 வயதான இரட்டையர்களுக்கு திருமணம் நடத்தி வைத்த பெற்றோர்
தாய்லாந்தைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் தமது இரட் டைப் பிள்ளைகளான 3 வயதான சிறுவனுக்கும் சிறுமிக்கும் திருமணச் சடங்கு வைத்துள்ளனர்.
இத் திருமணச் சடங்கை நடத்தாவிட்டால் இவர்களில் ஒருவர் இறந்து விடுவார் என பெற்றோர் நம்புவதே இதற்குக் காரணம்.
‘இச் சிறார்கள் முன்பிறவில் தம்பதியினராக இருந்ததாகவும் நம்பப்படுகிறது. இவர்கள் இரட்டைச் சகோதர சகோதரியாக மறுபிறவி எடுத்துள்ளனர்’ என மேற்படி இளம் மணமகன் மற்றும் மணமகளின் தாயான சசி ஹரின்மேக்காவனித் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இவர்கள் இருவருக்கும் திருமணம் செய்து வைக்காவிட்டால், இவர்களில் ஒருவர் இறந்துவிடுவர் என கூறப்பட்டதால் இத் திருமணம் நடத்தப்பட்டதாகவும் சசி ஹரின்மேக்காவனித் தெரிவித்துள்ளார்.
மேற்படி சிறார்களுக்கு 3 வருடங்கள் மற்றும் 4 மாத வயதாகுகிறது. தாய்லாந்தின் அங்தோங் மாகாணத்தில் பாரம்பரிய முறைப்படி இத் திருமண வைபவம் நடைபெற்றது.