லொத்தர் சீட்டிழுப்பில் ஒரு தடவை கூட பரிசு எதுவும் கிடைக்காத மக்கள் உலகில் கோடிக் கணக்கில் உள்ளனர். ஆனால், கனடாவைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் 3 தடவைகள் ஒரு இலட்சத்துக்கு அதிகமான டொலர் பரிசை லொத்தர் சீட்டிழுப்புகளில் வென்றுள்ளனர்.
பார்பரா பின்க் மற்றும் டக்ளஸ் பின்க் ஆகிய இத் தம்பதியினருக்கு 1989 ஆம் ஆண்டில் 128,000 கனேடிய டொலர் பெறுமதியான பரிசு லொத்தர் சீட்டிழுப்பில் கிடைத்தது.
அப் பணத்தை தனது 4 நண்பர்களுடன் பகிர்ந்துகொண்டார் டக்ளஸ் பின்க். அதன்பின் 2010 ஆண்டு 100,000 டொலர் பரிசு கிடைத்தது. இவை எல்லாவற்றையும் விட பெருந்தொகைப் பரிசு மூன்றாவது தடவையில் கிடைத்தது.
கடந்த பெப்ரவரி மாதம் கனேடிய லொட்டோ சீட்டிழுப்பில் இவர்களுக்கு 82 இலட்சம் கனேடிய டொலர்கள் (சுமார் 90 கோடியே 97 இலட்சம் ரூபா) பரிசு கிடைத்துள்ளது.
வேலைக்காக நகருக்கு வெளியே டக்ளஸ் பின்க் சென்றிருந்தபோது, அவரின் மனைவி பார்பரா பின்க் தான் லொத்தர் பரிசு கிடைத் திருப்பதை அறிந்து டக்களஸுக்கு தொலைபேசி மூலம் தகவல் தெரிவித்ததாராம்.