2500 ஆண்டுகளுக்கு முன்னர் அரசர் பயன்படுத்திய வாள் கண்டுபிடிப்பு
உலகில் பண்டைய காலத்தில் ஆட்சி செய்த மன்னர்கள் மற்றும் அப்போது வாழ்ந்த மக்கள் கலாசாரம் மற்றும் தொழிற்நுட்பத்திலும் சிறந்து விளங்கியமைக்கான பல சான்றுகள் அகழ்வாராச்சிகளின் போது கிடைத்துள்ளன.
உலகில் பல நாடுகளில் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட கட்டிடங்கள் மற்றும் தயாரிக்கப்பட்ட பொருட்களும் அகழ்வாராய்ச்சிகளின் போது கண்டுபிடிக்கப்படுகின்றன.
இவ்வாறான புராதன பொருள் ஒன்று சீனாவில் நடத்தப்பட்ட அகழ்வாராச்சியில் கிடைத்துள்ளது.
சீனாவில் 2 ஆயிரத்து 500 வருடங்களுக்கு முன்னர் ஆட்சி செய்த கௌஜீயாங் மன்னர் பயன்படுத்தியதாக கூறப்படும் வாள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
மன்னரின் கல்லறையில் மேற்கொண்ட அகழ்வராச்சியின் போது இந்த வாள் கிடைத்ததாக சீன தொல் பொருள் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வெண்கலத்தில் செய்யப்பட்டுள்ள இந்த வாள் தற்போது தயாரிக்கப்பட்ட புதிய வாள் போன்று காணப்படுவது சிறப்பம்சமாகும் எனவும் அவர்கள் கூறியுள்ளனர்.