ரொறொன்ரோ-சூடு பிடித்துள்ள ஒன்ராறியோவின் வீட்டுச் சந்தை விலைகளை தணிக்க மாகாண அரசாங்கம் திட்டங்களை மேற்கொள்ள தீர்மானித்துள்ளது. வெளிநாட்டு வாங்குவோர்களிற்கான வரியை 15-சதவிகிதமாக்கல், வாடகை கட்டுப்பாட்டை விரிவாக்கல், காலியாக இருக்கும் வீடுகளிற்கு வரி விதித்தல் மற்றும் மலிவான வீடுகளிற்கு உபரி நிலங்களை உபயோகித்தல் போன்றன இத்திட்டத்தில் அடங்குகின்றன.
கனடிய குடியுரிமை அற்றவர்கள் நிரந்தர வதிவிட அல்லது கனடிய பெரு நிறுவனங்கள் சம்பந்தப்பட்டவர்கள் அல்லாதவரிகளிடத்தில் குறிப்பிட்ட வரி அறவிடப்படும் என ஒன்ராறியோ முதல்வர் கத்லின் வின் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.
நயாகரா பிரதேசத்திலிருந்து பீற்றபொரோ ஒன்ராறியோ வரையிலுமான பகுதிகள்- Greater Golden Horseshoe area -எனப்படும் பிரிவிற்குள் அடங்கும். இந்த வரி ஏப்ரல் 21 முதல் நடைமுறையில் இருக்கும்.
ரொறொன்ரோ பெரும்பாகத்தில் தனி வீடொன்றின் சராசரி விலை கடந்த மாதம் 1.21-மில்லியன் டொலர்களிற்கு உயர்ந்துள்ளது. இந்த அதிகரிப்பு ஒரு வருடத்திற்கு முன்னயதை விட 33.4-சதவிகிதமாக உயர்வடைந்துள்ளது.
வானளாவ அதிகரித்துவரும் தேவை மற்றும் வளர்ந்து வரும் பொருளாதாரத்திற்கு வீட்டு விலை அதிகரிப்பு தேவையற்ற முக்கியத்துவம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
விலை அதிகரிப்பு அதிக அளவிலான மக்கள் தங்கள் எதிர்காலம் குறித்த மற்றும் ஒன்ராறியோவில் தங்கள் வாழ்க்கைத்தரம் பாதுகாப்பற்ற அச்சம் கொள்ள வழிவகுக்கும் என கருதப்படுகின்றது.
வாடகை கட்டுப்பாட்டையும் மாகாணம் விரிவுபடுத்துகின்றது. புதிய சட்டம் பிரகாரம் கடந்த 10வருடங்களாக சராசரி இரண்டு சதவிகிதமாக இருந்தத இவ்வருடம் 1.5-சதவிகிதமாகின்றது.
வெற்றிடமாக உள்ள வீடுகளை சொந்த காரர்கள் விற்க அல்லது வாடகைக்கு விட அவர்களை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் ரொறொன்ரோ மேயர் ஜோன் ரொறி வெற்றிடமாக இருக்கும் வீடுகளிற்கு வரி அறிவிட தீர்மானித்துள்ளார்.