இரண்டாம் உலகபோரில் கனடாவின் மிக முக்கிய தளங்களில் ஒன்றான யுனோ பீச்சிற்கு கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ விஜயம் செய்துள்ளார்.பரிசிஸ் நோமன்டியில் இந்த பீச் அமைந்துள்ளது.
யூன் 6 1944-ல் ஆயிரக்கணக்கான கனடிய படையினர், பிரிட்டிஷ் மற்றும் அமெரிக்க வீரர்களுடன் வட பிரான்ஸ் பிராந்தியத்தின் மீது போர் தொடுத்த நாளாகும். கடலிலும் தரையிலும் படையெடுத்த நாளாகும்.
ட்ரூடோ அவரது குடும்பத்தினருடன் திங்கள்கிழமை கடற்கரையோரமாக சூரிய வெளிச்சத்தில் நடந்து செல்கையில் மணலில் இரு பக்கத்திலும் நின்ற கனடிய கொடிகள் காற்றில் பறந்தன.
கனடிய தேசிய அடையாளம் பொறிக்கப்பட்ட முதலாம் உலக போரின் நினைவு தின நிகழ்விற்கு 20,000ற்கும் மேற்பட்ட கனடியர்கள் கலந்து கொண்ட பின்னர் பிரதமர் தனது குடும்பத்தினருடன் சென்றார். கனடிய போர்வீரர்களின் சமாதிக்கும் பிரதமர் விஜயம் செய்தார்.