மார்க்கம்-தோன்கில் தேர்தலில் பிரதமர் ஜஸ்ரின் ரூடோவின் லிபரல்கட்சி வெற்றி!

இன்று இடம்பெற்ற மார்க்கம்-தோன்கில் இடைத்தேர்தலில் லிபரல் கட்சி வெற்றி பெற்றது.

கனடிய லிபரல் கட்சியின் சார்பில் போட்டியிட்ட மேரி இங் என்பவரே வெற்றி பெற்றார். இன்று கனடாவில் இடம்பெற்ற ஐந்து இடைத்தேர்தலிகளில் ஒன்றாகவே இதுவும் இடம்பெற்றது.

ஆளும்கட்சியில் அங்கம் வகித்த ஐந்து பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் பதவியிலிருந்து விலகி அவர்களிற்கான தெரிவாக இந்தத் தேர்தல் இடம்பெற்றது.

வீழ்ந்த வாக்குக்களில் 52 விழுக்காட்டைப் பெற்று மேரி இங் அவர்கள் இந்தத் தேர்தலில் வெற்றிபெற்றார்.

இதன் பிரகாரம் மார்க்கம்-தோன்கில் தொகுதிக்கு என இடம்பெற்ற இந்தத் தேர்தலில் வேட்பாளர் தெரிவு தொடர்பான சர்ச்சைகள் ஆரம்பத்தில் கிளம்பியிருந்தன.

Gary-mary1-600x439 Gary-mary2-600x400

இருந்த போதும் கனடியப் பிரதமரின் அலுவலகத்தில் பதவி வகித்த மேரி இங் போட்டியின்றி இந்தத் தொகுதியில் நிறுத்தப்பட்டார்.

இதற்கான பிற்புலக் காரணமாக சீனர்கள் அதிகம் வாழும் இந்தத் தொகுதியில் இவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் சீனக் கனடியர்களற்கான அங்கீரகத்தை வழங்குவதாகவே கருதப்பட்டது.

குறிப்பாக தற்போது லிபரல் கட்சியிலுள்ள ஒரேயொரு சீனப் பாராளுமன்ற உறுப்பினராக ஆர்னோல்ட் சான் புற்றுநோய்கக்கான சிகிச்சை காரணமாக மருத்துவிடுப்பில் இருப்பதால், மேரி இங் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படலாம் என்று கருதப்பட்டது.

குறி;ப்பாக இந்தியர்கள் நால்வர் அமைச்சர்களாக உள்ளதுடன், ஒரு சோமலியர், ஒரு ஆப்கானியர் ஆகியோரும் அமைச்சர்களாக உள்ளனர்.

ஆனால் சனத்தொகையில் ஆங்கிலக் கனடியர்களிற்கு மற்றும் பிரெஞ்சுக் கனடியர்களிற்கு அடுத்த தொகையிலுள்ள சீனக் கனடியர்கள் மத்தியிலிருந்து ஒருவர் அமைசசராக்கப்படாதது குறையாகக் காணப்பட்டே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

அதுபோலவே தமிழர்களின் சாhபாக ஹரி ஆனந்தசங்கரிக்கும் ஒரு தகுதியான பொறுப்பு வழங்க வேண்டிய தேவையையும் இந்தத் தேர்தல் ஏற்படுத்தியுள்ளது.

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News