2017-19க்கான சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையை comdu.it ஆரம்பம்
டொரோண்டோ, கனடா – புலம்பெயர்ந்தோரால் திட்டமிட்டு, இலங்கையிலே செயற்படுத்தப்படும் தொழில்நுட்ப உதவித் திட்டங்களுக்காக $185,000 தொடக்கநிதியைத் திரட்டும் நோக்குடன் comdu.it அமைப்பு சிறப்பு நிதிதிரட்டும் நடவடிக்கையொன்றை ஆரம்பித்துள்ளது. இதற்குப் பங்களிக்க விரும்புபவர்கள்
http://gofundme.com/comduit என்ற இணயத்த்தைநாடலாம்.
இலங்கையிலே போரினால் பாதிக்கப்பட்டு அபிவிருத்தி குன்றிய, கிராமிய, மற்றும் சேய்மையான சமூகங்களில் பேணியலுகையுடைய அபிவிருத்தியை ஏற்படுத்த முயல்கின்ற கனேடிய புலம்பெயர் மாறுதல் விரும்பிகளின் ஒரு வலைப்பின்னலே comdu.it. மேலதிக விபரங்களைப்பெற தயவுசெய்து https://ln.sync.com/dl/ac7170670#vh9eyhys-yqew973d-r2jyjyz3-r4k5ah3f என்றஇணையத்தளத்தை நாடுங்கள்.
2014ல் பரீட்சார்த்த முயற்சியாக ஆரம்பிக்கப்பட்டு, தற்போது இலாப நோக்கற்ற அமைப்பாக பதிவுசெய்யப்பட்டுள்ள comdu.it, இலங்கையின் வடக்கு கிழக்கில் சமூகக்கட்டுமானப் பணிகளுக்காக தமது அறிவையும் நேரத்தையும் அர்ப்பணிக்க விரும்பும் கனேடியர்கள் – குறிப்பாக கனேடிய தமிழர்கள் – பங்குபற்றக்கூடியதனித்துவமான அனைத்துலக
முன்னேற்றத்திட்டங்களை திட்டமிட்டு செயற்படுத்துவதைக் குறியாகக் கொண்டுள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளும், கனேடியர்களை வடக்கிலும் கிழக்கிலும் களப்பணியில் ஈடுபடச்செய்யும் வகையிலான தொழில்நுட்ப உதவித்திட்டங்களை உள்ஊர் அமைப்புக்களுடன் இணைந்து comdu.it செயற்படுத்தும். இந்த தொழில்நுட்ப உதவித்திட்டங்கள் உயர்நிலை
மற்றும் பல்கலைக்கழக மாணணவர்கள் (மீளும்உரிமை செயற்திட்டம் – Right of Return program), புதிய மற்றும் இளம் தொழில் நெறிஞர்கள் (கூட்டிணைவு செயற்திட்டம் – Associateship program), இடைநிலை தொழில் நெறிஞர்கள் மற்றும் வணிக முதல்வர்கள் (மறைமுக வழிகாட்டுகை செயற்திட்டம் – Virtual Mentorship program), ஓய்வுபெற்ற தொழில்நெறிஞர் மற்றும் முதியோர் (முதியோர் செயற்திட்டம் – Elders program) போன்ற பல்வேறு வயதினரையும் கருத்தில் கொண்டதாக அமையும்.
மேற்குறிப்பிட்ட செயற்திட்டங்களுக்கு தெரிவுசெய்யப்படுவோரின் செலவீனங்களின் ஒருபகுதியை ஈடுசெய்யவும், இலங்கையிலும் கனடாவிலும் இந்தத் திட்டங்களை நிர்வகிக்க தகுதியுடையோரைப் பணியிலமர்த்தவும், அமைப்பின் பணிகளை மேப்படுத்தவும் இந்த தொடக்க நிதி பயன்படுத்தப்படும்.
comdu.it தனது பரீட்சார்த்த கட்டத்திலேயே பல சாதனைகளைப் புரிந்துள்ளது. 8 இலங்கை சார்ந்த அமைப்புக்களுடனும், 10 கனேடிய அமைப்புக்களுடனும் ஒன்றிணைந்து செயற்பட்டமை, பல சிறுவர்களுக்கு நுண்தொகை புலமைப்பரிசில்களையும் தொழில்முனையும் பெண்களுக்கு நுண்தொகை பரிசில்களையும்வழங்கியமை, கனேடிய மற்றும் அனைத்துலக கருத்தரங்குகளில் பேசுவதற்கு அழைக்கப்பட்டமை, கனடா, அமெரிக்கா, மற்றும் ஐக்கிய இராட்சியத்தில் பல்வேறு ஆய்வுகளில் ஈடுபட அழைக்கப்பட்டமை, பல்வேறு ஊடகங்களில் வெளியிடப்பட்டமை, இலங்கையின் முக்கிய சமூகத்தலைவர்கள் மற்றும் வணிக முதல்வர்களோடுகலந்துரையாடலில் ஈடுபட்டமை என்பன இதில் அடங்கும்.
comdu.itன் அடிப்படைக் குறிக்கோள்: புலம்பெயர்ந்தோரின் பங்களிப்பின் நோக்கத்தை அறக்கொடையில் இருந்து பேணியலுகைக்கும், உதவுதலிலிருந்து பொருளாதார மேம்பாட்டுக்கும், பண அனுப்பீட்டிலிருந்து அறிவுசார் பொருளாதாரத்திற்கும் மாற்றுவதே. அடுத்த தலைமுறைக் கனேடியர்கள் இலங்கையிலேநேர்மறையான உணர்வுபூர்வமான ஈடுபாட்டை மேற்கொள்வதை ஊக்குவிக்கும் வகையிலே புலம்பெயர்ந்தோரின் தொழில்நுட்ப உதவிகளை ஒருங்கிணைத்து சீரமைத்துப் பெருக்கும் வெளிப்டையான, ஒளிவு மறைவற்ற, ஒத்திசையக்கூடிய ஒரு வலைப்பின்னலாக தன்னை உருவாக்கிக்கொள்ளும் உறுதி இந்த அடிப்படைக்குறிக்கோளில் இருந்து பிறந்ததே.