2017 ஐ.பி.எல் தொடரில் பேட்டிங், பவுலிங் போன்றவற்றில் பல அணிகளை சேர்ந்த வீரர்கள் தங்களின் ஆகச்சிறந்த பங்களிப்பை வழங்கினார்கள்.
பந்து வீச்சை பொறுத்தவரையில், ஹைதராபாத் அணியின் வேகப்பந்து வீச்சாளர் புவனேஸ்வர் குமார் 14 போட்டிகளில் விளையாடி 26 விக்கெட்களை வீழ்த்தினார்.
இதன் மூலம் தொடர்ந்து இரண்டாவது முறையாக புவனேஷ்குமார் பந்து வீச்சில் முதலிடம் பிடித்துள்ளார்.
பஞ்சாப் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 19 ஓட்டங்கள் விட்டு கொடுத்து 5 விக்கெட்களை வீழ்த்தியது இவரின் சிறந்த பந்து வீச்சாகும்.
2017 ஐ.பி.எல் தொடரில் பேட்டிங்கில் ஹைதராபாத் அணியின் தலைவர் டேவிட் வார்னர் முதலிடம் பிடித்துள்ளார்.
இவர் 14 போட்டிகளில் விளையாடி ஒரு சதம், 4 அரைசதம் உட்பட 641 ஓட்டங்களை குவித்துள்ளார்.
வார்னர் அதிகபட்சமாக கொல்கத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் 59 பந்துகளில் 126 ஓட்டங்களை விளாசி அசத்தியுள்ளார்.