சிங்கள பௌத்த மக்களை இந்நாட்டில் சிறுபான்மையாக்க நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும், கடந்த 2014 ஆம் ஆண்டில் மாத்திரம் சிங்கள யுவதிகள் 4800 பேர் இஸ்லாம் மதத்துக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இன்றைய (15) ஞாயிறு சகோதர தேசிய வார இதழொன்றில் வெளியாகியுள்ள புகைப்படங்களுடனான கட்டுரையொன்றில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் இளைஞர்கள் சிங்களப் பெண்களைத் திருமணம் செய்ததன் மூலமாக திட்டமிட்டு இந்த மதமாற்றம் நடைபெற்றுள்ளதாகவும் அக்கட்டுரையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சனப் பெருக்கம் தொடர்பில் இணையத்தளங்களில் வெளியாகும் செய்திகள் உண்மையானதா? எனும் தலைப்பில் இக்கட்டுரை வெளியாகியுள்ளது.
நீண்டகால திட்டத்தின் அடிப்படையில் சிறுபான்மையினமாகவுள்ள முஸ்லிம்கள் தங்களைப் பெரும்பான்மையாக மாற்றுவதற்கு நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும், இந்த தகவல்கள் இணையத்தளங்களில் வெளியாவது பொய்யாயின் அது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினர் முன்வந்து நிரூபிக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.