200,000 டொலர் மோசடி!! கனேடிய பொலிஸாரிடம் சிக்கிய இலங்கைக்குடும்பம்….
தமிழன் இல்லாத நாடும் இல்லை, தமிழனுக்கென்று ஒரு நாடும் இல்லை என்று சொல்வார்கள். அதே போல தமிழன் என்றோர் இனம் உண்டு, தனியே அதற்கோர் குணம் உண்டு என்றும் சொல்வார்கள். இவற்றுக்கு சரியான உதாரணம் தமிழர்கள்.
இவர்கள் அங்கு டீசெண்டான வேலை பார்த்து சம்பாதிக்கின்றனர் என்று நாம் நினைத்து கொண்டிருக்க இன்னொருவரின் வீட்டை அடகு வைத்து இரண்டாவது தடவையாகவும் கடன் பெற்ற மோசடி பேர்வழிகளான கணவனும், மனைவியும் வேறு வழி இல்லாமல் கனடா பொலிஸில் சரண் அடைந்து உள்ளனர்.
கணவன் – வயது 57, மனைவி வயது – 54 ஆகியோரே போலி ஆவணங்களை சமர்ப்பித்து மோசடி செய்துள்ளனர்..
2015 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் அளவில் முதல் தடவை விண்ணப்பித்து பெருந்தொகை ரொக்க பணத்தை கடன் பெற்றனர். இதே போல 200, 000 டொலர்களை புதிதாக விண்ணப்பித்து பெற்ற நிலையிலேயே மாட்டி உள்ளனர்.
வீட்டு உரிமையாளர் உண்மையான ஆவணங்களை காண்பித்து சட்ட நடவடிக்கை எடுத்தார். பொலிஸார் இருவரின் புகைப்படங்களையும் வெளியிட்ட நிலையிலேயே வேறு வழி இல்லாமல் இவர்கள் சரண் அடைந்தனர்.
பின்ஞ் அவனியூ வேஸ்ட் நீதிமன்றத்தில் இவர்கள் மீதான வழக்கு அடுத்த மாதம் 24 ஆம் திகதி இடம்பெற உள்ளது. 5000 டொலர்களுக்கு மேல் மோசடி செய்ததாக வழக்கிடப்பட்டு உள்ளது.