20,000டொலர்கள் வெகுமதி பெற்ற தன்னலமற்ற அதிபர்.
கனடா- அல்பேர்ட்டாவில் வோர்ட் மக்முரே என்ற இடத்தில் பாடசாலை அதிபர் ஒருவர் அப்பகுதியில் கடந்த இலைதுளிர் காலத்தில் இடம்பெற்ற பேரழிவை ஏற்படுத்திய காட்டுத் தீ பரவிய காலத்தில் கடமை அழைப்பிற்கும் அப்பால் சென்று பணிபுரிந்துள்ளார்.இவரின் தன்னலமற்ற சேவைகளிற்காக விசேட வெகுமதி அளிக்கப்பட்டுள்ளது.
கடந்த மே-3ல் கொடிய தீ ஏற்பட்டபோது டாக்டர் கே.ஏ.கிளாக் தொடக்க பள்ளி அதிபர் Merrie-Rae Mitsopoulos பாடசாலையை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்காளானார்கள்.இரண்டு மாணவர்கள் தங்கள் பெற்றோர்களை தொடர்பு கொள்ள முடியவில்லை. அதிபர் இருவரையும் தன்னுடன் சேர்த்து கொண்டார்.
இரு மாணவர்களுடனும் பல பேரூந்து பயணங்களை மேற்கொண்டு வோர்ட் மக்முரேயை விட்டு வெளியேறினார். எட்மன்டன் சென்று மாணவர்களையும் தன்வீட்டில் வைத்திருந்தார்.
நான்கு நாட்களின் பின்னர் இரு மாணவர்களில் ஒருவரை கவலையுடன் இருந்த அவனின் தாயுடன் சேர்த்தார். இந்த மனதை உருக்கும் சந்தர்ப்பம் படமாக்கப்பட்டு செய்திகளில் வெளியாகியது.
இவரது இரக்க சுபாவம் உணர்திறன் என்பன சிரிவியின் The Marilyn Denis Show வின் கவனத்தை ஈர்த்தது.
அதன் தயாரிப்பாளர் அதிபரை வருட் இறுதி நிகழ்விற்கு அழைத்துள்ளார்.
19,000டொலர்களிற்கும் மேற்பட்ட தொகையுடைய பரிசுகளை இவருக்கு வழங்கினர்.
ஆடைகள், நகைகள், எலக்ரோனிக், சாதனங்கள், விளையாட்டு பொருட்கள் மற்றும் பரிசு அட்டைகள் போன்ற இவற்றில் அடங்கியுள்ளது.