பாகிஸ்தானிலுள்ள பள்ளிவாசல் ஒன்றின் காப்பகத்திலிருந்து மயக்கமருந்து கொடுக்கப்பட்டு, வெட்டியும், தாக்கியும் கொடூரமாக கொலைசெய்யப்பட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 20 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு தகவல்கள் தெரிவித்துள்ளன.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்திலுள்ள சர்கோதா மாவட்டத்தின் லாஹூர்நல்லார் பிரதேசத்திலுள்ள கிராமத்திலுள்ள முஹம்மது அலி குஜ்ஜார் பள்ளிவாசலில் மன நோயாளிகளை குணப்படுத்தும் சிகிச்சை முறைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
இந்நிலையில், குறித்த பள்ளிவாசலின் காப்பகத்தை நிர்வகிப்பது தொடர்பாக, இரு பரம்பரை குழுக்களிடையே கடும் போட்டிகள் நிலவி வந்துள்ளது.
மேலும் குறித்த காப்பகத்தின் காப்பாளரான அப்துல் வஹீத் என்பவர் சமீபகாலமாக மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருந்து வந்துள்ளார். அவரது திட்டத்தின் பிரகாரம் எதிர் பரம்பரையை சேர்ந்தவர்களுக்கு மயக்க மருந்து கொடுக்கப்பட்டு கொடூரமான முறையில் கூறிய ஆயுதங்களால் தாக்கி கொலை செய்துள்ளார்.
மேலும் குறித்த கொலை சம்பவத்தில் காப்பகத்தில் சிகிச்சைக்காக வந்திருந்த 3 பெண்களும் கொல்லப்பட்டுள்ளதோடு, கொலைக்கு உதவியாக இருந்த 5 பேரை கைது செய்துள்ளதோடு, தலைமறைவாகியுள்ள மேலும் சில சந்தேக நபர்களை தேடி வருவதாக பாகிஸ்தான் பொலிஸார் தெரிவித்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் பகிர்ந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.