பாகிஸ்தான் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு, கராச்சியில் உள்ள லந்தி சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 20 இந்திய மீனவர்கள் விடுவிக்கப்படவுள்ளனர்.
20 இந்திய மீனவர்கள் ஞாயிற்றுக்கிழமை வாகா எல்லைக்கு கொண்டு செல்லப்பட்டு இந்திய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படுவார்கள் என்று குஜராத் அதிகாரிகள் சனிக்கிழமை உறுதிபடுத்தியுள்ளார்.
‘The Edhi Trust’ என்ற இலாப நோக்கற்ற சமூக நல அமைப்பானது 20 இந்திய மீனவர்களை பாதுகாப்பாக வாகா எல்லைக்கு கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகளை செய்துள்ளது.
‘வாகா’ இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையேயான ஒரே சாலைப்புற எல்லையாகும்.
விடுவிக்கப்பட உள்ள பெரும்பாலான மீனவர்கள் குஜராத்தில் உள்ள கிர் சோம்நாத் மாவட்டம் மற்றும் கிர் சோம்நாத்தின் உனா கடற்கரையில் உள்ள பகுதிகளை சேர்ந்தவர்கள் ஆவர்.
பாகிஸ்தானில் சிறைத்தண்டனையை முடித்த 376 இந்திய மீனவர்களில் இவர்களும் அடங்குவர், மேலும் அவர்களது குடியுரிமை இந்தியாவால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அவர்களில் சிலர் நீண்ட காலத்திற்கு முன்பே பாகிஸ்தானில் தண்டனையை முடித்துள்ளனர்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | easy24newskiruba@gmail.com