இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்படும் 19 வயதுக்குட்பட்ட 3ஆம் பிரவு ஏ அடுக்கு இறுதிப் போட்டியில் யாழ். மத்திய கல்லூரியும் மொறட்டுவை மெதடிஸ்த உயர்தர பாடசாலையும் இன்று 5 ஆம் திகதி மோதவுள்ளன.
இப் போட்டி மின்னேரியா கன்னர்ஸ் விளையாட்டரங்கில் நடைபெறவுள்ளது.
கொக்குவில் இந்து கல்லூரி, ஸ்கந்தவரோதயா கல்லூரி, யாழ். இந்து கல்லூரி, யாழ். சென். பெட்ரிக்ஸ் கல்லூரி ஆகியவற்றை முதல் சுற்றில் வெற்றிகொண்ட யாழ். மத்திய கல்லூரி, இரண்டாவது சுற்றில் கொழும்பு டி லா சால் கல்லூரியை வெற்றிகொண்டு இறுதிச் சுற்றுக்கு முன்னேறியது.
கால் இறுதிப் போட்டியில் இப்பாகமுவ மத்திய கல்லூரியையும் அரை இறுதிப் போட்டியில் மத்துகம சென். மேரிஸ் கல்லூரியையும் வெற்றிகொண்டு இன்றைய இறுதிப் போட்டிக்கு யாழ். மத்திய கல்லூரி முன்னேறியது.
டி லா சால் கல்லூரி, கேரி கல்லூரி, எஸ்.டி.எஸ். ஜயசிங்க கல்லூரி, கோட்டே சென். தோமஸ் கல்லூரி, மஹரகம ஜனாதிபதி கல்லூரி, சி. டபிள்யூ. டபிள்யூ. கன்னங்கர கல்லூரி ஆகியவற்றை முதல் சுற்றில் வெற்றிகொண்ட மெதடிஸ்த கல்லூரி. இரண்டாவது சுற்றில் கொக்குவில் இந்து கல்லூரியை வெற்றிகொண்டு இறுதிச் சுற்றில் விளையாட தகுதிபெற்றது.
கால் இறுதியில் ஹன்வெல ராஜசிங்க மத்திய கல்லூரியையும் அரை இறுதியில் நீர்கொழும்பு லோயலா கல்லூரியையும் வெற்றிகொண்டு இறுதிப் போட்டியில் விளையாட மெதடிஸ்த கல்லூரி தகுதி பெற்றது.
இறுதிப் போட்டிக்கு தெரிவான இந்த இரண்டு அணிகளும் சம பலம் கொண்டவையாக இருப்பதால் இன்றைய இறுதிப் போட்டி கடைசிவரை விறுவிறுப்பை தோற்றுவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
யாழ். மத்திய கல்லூரி: ஸ்ரீதரன் சாரங்கன் (தலைவர்), விநாயகசெல்வன் கவிதர்ஷன் (உதவித் தலைவர்), ரி. கௌதம், ஜீ. ஜனுஜன், பி. ஆனந்தன் கஜன், எம். சஞ்சயன், ஜே. விதுஷன், யூ. தர்மிகன், ரஞ்சித் குமார் நியூட்டன், நிஷாந்தன் அஜய், எஸ். சயந்தன், ஐ. அபிலாஷ், எஸ். சிமில்டன், எஸ். கெவின் டெரிக்சன், எஸ். அனுசாந்த், ஜே. ஜெபிசன்.
மெதடிஸ்த உயர்தர பாடசாலை: லக்ஷான் சாமிக்க பெர்னாண்டோ (தலைவர்), தெவ்மித் பெர்னாண்:டோ, கவீன் அஞ்சன பெர்னாண்டோ, அக்கில டில்ருக், தரங்க பெர்னாண்டோ, நிலக்ஷன பெர்னாண்டோ, நிம்சர சில்வா, மதுஷன்க பெர்னாண்டோ, ஜயங்க பீரிஸ், விஷ்மிக்க டி சில்வா, சந்தருவன் பெரேரா, கவீஷ பெர்னாண்டோ, ஷாலுக்க பெர்னாண்டோ, நெத்சர பெர்னாண்டோ, நிமேஷ பெர்னாண்டோ, மல்ஷான் டி சில்வா, திமுத் பெரேரா, சமோத மதுஷன்க, அக்கலன்க குமாரசிறி, சாமிக்க பெர்னாண்டோ.