சோகமான சாதனையை சொந்தமாக்கியது வங்கதேசம்
நியூசிலாந்து சென்றுள்ள வங்கதேச அணி, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது.
வங்கதேசம் முதல் இன்னிங்சில் 8 விக்கெட் இழப்புக்கு 595 ஓட்டங்களை குவித்து டிக்ளேர் செய்தது.
பின்னர் முதல் இன்னிங்சிஸில் விளையாடிய நியூசிலாந்துஅனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 539 ஓட்டங்கள் எடுத்தது.
வங்கதேசம் இரண்டாவது இன்னிங்சில் சகல விக்கட்டுகளையும் இழந்து 160 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.
217 ஓட்டங்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய நியூசிலாந்து அணி கேன் வில்லியம்சனின்(104 ஓட்டங்கள்) சிறப்பான ஆட்டத்தால் நியூசிலாந்து அணி, 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இதன் மூலம் சுமார் 122 ஆண்டு சாதனையை நியூசிலாந்து அணி தகர்த்தது.
சர்வதேச டெஸ்ட் அரங்கின் முதல் இன்னிங்சில் 595 ஓட்டங்கள் குவித்து, இது வரை எந்த அணியும் தோல்வியை சந்தித்தது இல்லை.
இப்போட்டியில் தோல்வியை சந்தித்த வங்கதேச அணி, இந்த சோகமான சாதனையை சொந்தமாக்கியது.
முன்னதாக கடந்த 1894-95ல் சிட்னியில் நடந்த டெஸ்டில், அவுஸ்திரேலிய அணி, இங்கிலாந்துக்கு எதிராக 586 ஓட்டங்கள் எடுத்து தோல்வியை சந்தித்தது.