ஐரோப்பாவில் வரலாறு காணாத பனிப்பொழிவு!
ஐரோப்பா கண்டத்தில் நிலவுகின்ற மிக மோசமான குளிரால் இதுவரையிலும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐரோப்பாவில் கடுமையாக குளிர் நிலவுகிறது, இரவில் – 10 டிகிரி செல்சியஸாக குறைந்துள்ளது.
கடும் குளிரை தாங்க முடியாமல் இதுவரையிலும் 20க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இவர்களில் பெரும்பாலானவர்கள் அகதிகள் மற்றும் வீடுகள் இல்லாமல் தெருவில் வசிப்பவர்கள் ஆகும்.
பிரித்தானியாவில் பனிப்பொழிவு அதிகமாக இருக்கும் என்றும், ஒற்றை இலக்கங்களில் வெப்பநிலை நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடலில் அலைகள் ஆக்ரோஷமாக எழலாம் என கூறியுள்ள அதிகாரிகள், பனியால் துருவங்களில் இருக்கும் சீதோஷண சூழ்நிலையை அனுபவிக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளனர்.