எந்த ஒரு வழக்கையும் சிதைப்பதற்கு பழசாக கல்கரி பொலிசார் நினைப்பதில்லை.
அனாதரவாக விடப்பட்டிருந்த சைக்கிள் ஒன்றை கல்கரி அக்காடியா பகுதி வீடொன்றின் அருகில் கண்டெடுத்த ரோந்து அதிகாரிகள் வீடு வீடாக சென்று அதன் சொந்தகாரர் யாரென அறியும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இம்முயற்சி பலனளிக்காததால் அப்பகுதி கண்காணிப்பு வீடியோவையும் பார்த்துள்ளனர்.அதுவும் பலனற்றதென உறுதியானது.
முயற்சியை கைவிடாது அதிகாரிகள் சில தகவல் தொகுப்புக்களை ஆராய்ந்துள்ளனர்.தகவல் ஒன்று கிடைத்துள்ளது. ஆனால் சொந்த காரரின் விபரம் காலாவதியானது தெரியவந்தது.
சைக்கிள் 1999-ல் களவாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்துள்ளது. அதன் சொந்த காரர் ஒன்ராறியோவிற்கு இடம்பெயர்ந்து விட்டார் என்ற தகவலும் கிடைத்தது.
அதிகாரிகள் ஒன்ராறியோ அதிகாரிகளுடன் தொடர்பு கொண்டு சொந்த காரரை கண்டறிந்தனர்.
வண்டியும் ஓட்டக்கூடிய நிலையில் உள்ளது.
சரியான தகவல்கள் இருந்தால் எத்தகைய குற்ற செயல்களும் எத்தனை வருடங்கள் சென்றாலும் வெற்றிகரமாக முடிவடையும் என்பதை இந்த சம்பவம் நினைவு படுத்துகின்றதென்பதை தாங்கள் தெரிவிப்பதாக கல்கரி பொலிசார் தெரிவித்துள்ளனர்.