2017 ஆம் ஆண்டை முதலாவதாக கொண்டாடிய நியூசிலாந்து
2016 ஆம் ஆண்டு முடிவடைந்து 2017 ஆண்டை வரவேற்பதற்காக பொதுமக்கள் அனைவரும் காத்து கொண்டிருக்கின்றனர்.
அதுபோல் 2017ம் ஆண்டு நியூசிலாந்தில் இனிதே பிறந்தது. அந்நாட்டு மக்கள் புத்தாண்டை பட்டாசுகள் வெடித்து, வான வேடிக்கையுடன் வரவேற்றனர்.
2016ம் ஆண்டின் கடைசி நாளான டிசம்பர் 31 ஆம் திகதி இன்று. உலகின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள நியூசிலாந்து நாட்டில்தான் எப்போதுமே சூரியன் முதலில் உதயமாவது வழக்கம்.
இந்திய நேரப்படி இன்று மாலை 4.30 மணிக்கு நியூசிலாந்தில் இரவு 12 மணியானது. எனவே நியூசிலாந்து பொதுமக்கள், வான வேடிக்கையுடன் 2017 புத்தாண்டை மகிழ்ச்சியோடு வரவேற்றனர். இதைத் தொடர்ந்து அடுத்தபடியாக அவுஸ்திரேலியாவிலும் 2017 ஆம் ஆண்டை மக்கள் ஆரவாரத்துடன் வரவேற்றனர்.
இது படிப்படியாக ஜப்பான், சிங்கப்பூர் என கிழக்கு ஆசிய நாடுகளைத் தாண்டி, தெற்காசிய நாடுகளில் புத்தாண்டு பிறக்கும். மேலும் இலங்கை, இந்தியா உள்ளிட்ட நாட்டு மக்கள் புத்தாண்டை வரவேற்க ஆவலுடன் காத்துகொண்டிருக்கின்றனர்.