17 வருடத்தில் இந்த ஆசை மட்டும் நிறைவேறவில்லை- த்ரிஷா வருத்தம்
த்ரிஷா சினிமாவில் நடிக்க வந்து 17 வருடங்கள் ஆகிவிட்டது. இன்னும் இளமை மாறாமல் முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக தான் இவர் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் தமிழ் சினிமாவில் கமல், அஜித், விஜய், விக்ரம், சூர்யா, சிம்பு, தனுஷ், ஆர்யா, ஜீவா, ஜெயம் ரவி, விஷால் என அனைத்து முன்னணி நடிகர்களுக்கும் ஜோடியாக நடித்து விட்டார்.
ஆனால், இன்னும் சூப்பர் ஸ்டாருக்கு ஜோடியாக நடிக்க முடியவில்லை என மிகவும் வருத்தத்தில் இருக்கிறாராம், கூடிய விரைவில் இதுவும் நடக்க வாழ்த்துக்கள்.