17 வயதில் திருமணம் 22 வயதில் விவாகரத்து ஒரு பெண் போலீஸ் அதிகாரியின் வாழ்க்கை பயணம்
மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் கோட்மா பகுதியை சேர்ந்தவர் அனிதா பிரபா அனிதா 1992-ல் பிறந்தவர். மத்திய பிரதேசத்தின் கோட்மாவின் அரசு பள்ளியில் படித்த இவர் பத்தாம் வகுப்பில் 92 சதவீத தேர்ச்சி பெற்றவர்
இவர் தொடர்ந்து படிக்க விரும்பினார். ஆனால், அவரது பாரம்பரியம், சடங்கு போன்ற தடைகள் காரணமாக தன்னை விட பத்து வயது மூத்த நபருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார்.
தன் வாழ்வில் பொருளாதார நிலையால் பாதிக்கப்பட்ட போதிலும், அனிதா நான்கு வருடத்தில் பட்டம் படித்து முடித்தார். பின் அனிதா தன் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டிய நிலையில் இருந்ததால், தனது விடாமுயற்சியின் காரணமாக ஒப்பனை கலைஞராக வேலை செய்ய துவங்கினார்.
ஒருகட்டத்தில் அனிதா தன் கணவரின் தொல்லைகள், பிடித்த வேலை, மகிழ்ச்சியான வாழ்க்கை, குடும்பம் இல்லாமல் மன வருத்தத்தை சந்தித்தார்.ஆனாலும் அவர் 2013-ல் வனத்துறை அதிகாரி தேர்வில் தேர்ச்சி பெற்று, பாலாகாட் மாவட்டத்தில் பணியில் அமர்ந்தார்.
அதன் பின் தன் வாழ்வின் இன்னல்களை தூக்கி எரிந்து தனது லட்சியங்களை உயர்த்தி சப்-இன்ஸ்பெக்டர் தேர்வு எழுதி, கடின பயிற்சிகளில் வெற்றி பெற்று தேர்வானார்.அதன் பின் தனது வாழ்க்கையில் பல மன கஷ்டத்தினால் 22 வயதில் விவாகரத்து பெற்றார்.
அதே நேரத்தில் மத்தியப்பிரதேசம் மாநிலத்தின் பொது சேவை ஆணைக்குழு தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று, தனது 25 வயதில் பெண்கள் பிரிவில் 17-ம் இடம் பிடித்து, டி.எஸ்.பி-யாக தேர்வு செய்யப்பட்டார்.
தனது 25 வயதில் ஒரு பெண் என்ன செய்து விட முடியும்? என்ற கேள்வியை முறியடித்து. மீண்டும் கலெக்டர் பதவிக்கு தனது இலட்சியத்தை உயர்த்தி அதற்கான பயிற்சிகளில் ஈடுபட்டு, அதற்கான தேர்விலும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார்