ரொறொன்ரோவில் ஆணுக்கு கத்திக்குத்து
கனடா, ரொறொன்ரோவில் பிரம்டொன் நகரில் ஆண் ஒருவர் கத்திக்குத்திற்கு இலக்காகி உயிருக்கு ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் இன்று (புதன்கிழமை) அதிகாலை இடம்பெற்றிருப்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
குறித்த ஆணின் கழுத்துப்பகுதியில் குத்தப்பட்டுள்ளதாகவும் இதனால் அதிகளவான குருதி இழக்கப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
எவ்வாறான போதும் குறித்த சம்பவத்தினால் பொதுமக்களுக்கு பாதுப்புக்கள் எவையும் ஏற்படவில்லை என்றும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருந்தபோதிலும் தாக்குதலை நடத்தியவர் யார் என்ற விபரங்களை பொலிஸார் வெளியிட மறுத்துள்ளதாகவும் உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.