இந்தியாவின் புனே மாநிலத்தில் உள்ள சிங்காகட் கோட்டையிலிருந்து தவறிவிழுந்த கர்ப்பிணிப் பெண் அதிசயத்தக்க வகையில் உயிர் தப்பியுள்ளார். இந்த சம்பவம் குறித்த பகுதியில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிறை மாத கர்ப்பிணியான ப்ரநிதா என்பவர், தனது கணவர் லாஹு இன்வேல் மற்றும் சகோதரர் சுரேஷ் உடன் சிங்காகட் கோட்டைக்கு சென்றுள்ளார்.
இதன் போது, கோட்டையின் மீது ஏறிய ப்ரநிதா உச்சியிலிருந்து செல்பி எடுக்க முயன்ற போது தவறி 150 அடி பள்ளத்தாக்கில் விழுந்தார். எனினும் அதிர்ஷ்டவசமாக கீழே உள்ள தடித்த புதர்கள் மேல் அவர் விழுந்தமையினால் அவர் உயிர் பிழைத்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் கேள்விபட்டு சம்பவ இடத்துக்கு விரைந்த உள்ளூர் மக்கள் சிறிய காயங்களுடன் இருந்த ப்ரநிதாவை மீட்டு வைத்தியசாலையில் சேர்த்துள்ளனர்.
குறித்த பெண்ணை பரிசோதித்த மருத்துவர்கள் அவரது குழந்தைக்கும், அவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.