15-வயது பெண்ணை தேடி அம்பர் எச்சரிக்கை!
கனடா- மிசிசாகாவை சேர்ந்த 15வயது பெண் ஒருவருக்கு அம்பர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஞாயிற்றுகிழமை பிற்பகல் இப்பெண் கடத்தப்பட்டிருக்கலாம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இரண்டு ஆண்கள் இப்பெண்ணை பலவந்தமாக ஒரு கிரே நிறம் அல்லது சில்வர் நிறமுடைய பழைய மொடல் ஹொன்டா ஒடிசிக்குள் ஏற்றியதாக சாட்சியங்கள் கண்டதாக பொலிசார் கூற்று பிரகாரம் தெரியவந்துள்ளது.
ஞாயிற்றுகிழமை பிற்பகல் 12.25மணியளவில் சென்ட்.பாப்ரா புளுவாட் மற்றும் கொமிஸ்கி கிரசென்ட பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.
வாகனம் டெரி வீதி மேற்கை நோக்கி சென்றதாகவும் கூறப்படுகின்றது.
இரவு 9மணியளவில் 15-வயதுடைய அலிசா லாங்கில் என்ற பெண்ணை காணவில்லை என பெற்றோர் பொலிசில் புகார் செய்தனர். இதனை தொடர்ந்து கடத்தப்பட்ட பெண் இவள் என பொலிசார் தீர்மானித்தனர்.
லாங்கில் 5அடி2அங்குல உயரம், தோள்மட்டிலுமான பொன்நிற முடி மற்றும் நீல கண்கள் கொண்ட தோற்றமுடையவள். கடத்தப்பட்ட சமயம் கிரே கலர் தளர்வான சூடான காற்சட்டை, கறுப்பு சுவெட்டர் மற்றும் சிவப்பு நிற எயர் ஜோடன் ஓடுவதற்கான காலணி அணிந்திருந்திருந்ததுடன் தலை முடியை உயர்த்திகட்டியிருந்ததாக கூறப்படுகின்றது.
முதலாவது சந்தேக நபர் தென் ஆசிய ஆண். 24-வயது 6அடி-2அங்குல உயரம், பிறவுன் கண்கள், மெல்லிய தோற்றம் கொண்டதுடன் ஒறேஞ் நிற தலைப்பாகை அணிந்து ஒரு கிரே கையற்ற சுவெட்டர் அதற்கு அடியில் பச்சை சேர்ட் அணிந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரண்டாவது சந்தேக நபரும் தென் ஆசிய ஆண் கறுப்பு முடி என்ற அடையாளங்கள் மட்டுமே தெரிவிக்கப்பட்டுள்ளது.
இப்பெண் கடந்த வருட இறுதியிலும் காணாமல் போய் மீண்டும் திரும்பி வந்ததாகவும் கூறப்பட்டது.
தற்சமயம் இச்சம்பவத்தை ஒரு “சீரற்ற கடத்தல்” என பொலிசார் தெரிவிக்கின்றனர்.
தகவல் தெரிந்தவர்கள் (905) 453-2121, ext. . 1233 அல்லது பீல் கிரைம் ஸ்ரொப்பசுடன் 1-800-222-TIPS (8477).என்ற இலக்கத்தில் தொடர்புகொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகின்றனர்.
கடந்த சில மாதங்களில் இப்பெண் 3தடவைகள் காணாமல் போனதாக இவளின் பெற்றோர் தெரிவித்தனர்.
.