வெளிநாட்டு நீதிபதிகள் விவகாரம்! பான் கீ மூன் பதிலளிக்காத காரணம் இதுதானாம்!
இலங்கையின் போர்க்குற்ற விசாரணைகளில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்குவதுதொடர்பில் ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன், தமது இலங்கை விஜயத்தின்போதுஉரிய பதிலை வழங்கவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் தெரிவிக்கப்படுகின்றன.
எனினும் இந்த விடயத்தில் நல்லிணக்கத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையிலேயே அவரின்பதில் அமைந்திருந்ததாக கருதப்படுகிறது.
இலங்கையில் சிங்கள இனவாதக் கொள்கைகள் வேரூன்றி உள்ளன.இந்தநிலையில் தற்போது இனவாதிகளால் எதிர்பார்க்கப்பட்ட ஒரு விடயத்தில் பான்கீ மூன், கருத்தை கூறியிருந்தால் அதனை வைத்துக்கொண்டே சிங்கள மக்களை திசைதிருப்பஇனவாதிகள் காத்திருக்கின்றனர்.
எனவே தான் பான் கீ மூன் வெளிநாட்டு நீதிபதிகள் என்ற விடயத்தில் தமது கருத்தைவெளியிடவில்லை என்று கூறப்படுகிறது.
எனினும் யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடனான சந்திப்பின் போது குறித்தபோர்க்குற்ற விசாரணை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், சர்வதேச நீதிபதிகள் என்றவிடயம் தொடர்பில் பார்க்க முடியும் என்ற கருத்தை அவர் வெளிப்படுத்தியுள்ளார்.
அத்துடன் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையின் யோசனையில் 100 வீதத்தையும்இலங்கை அரசாங்கம் நிறைவேற்ற முயற்சிக்க வேண்டும்.
இதன்போது 70-80 வீதத்தையாவது நிறைவேற்ற முடியும். 50 வீதத்தை நிறைவேற்ற முயற்சித்தால்20 வீதத்தை கூட நிறைவேற்ற முடியாது என்றும் இலங்கை அரசாங்கத்திடம் கூறியுள்ளதாக பான்கீ மூன் கூட்டமைப்பினரிடம் தெரிவித்திருந்தார்.
அதேநேரம் கொழும்பில் நேற்று மாலை இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதும்,வெளிநாட்டு நீதிபதிகள் தொடர்பில் இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும்தீர்மானிக்கும் என்ற கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்துடன் இருந்தஇடைவெளித்தன்மை, தற்போதைய மைத்திரிபால சிறிசேனவின் அரசாங்கத்தின் காலத்தில்குறைந்து வருகிறது.
அது மேலும் குறையும் என்று தாம் எதிர்ப்பார்ப்பதாக பான் கீ மூன் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில் நீதிப்பொறிமுறை இலங்கையில் பாதிக்கப்பட்ட அனைத்து மக்களுக்கும் சர்வதேசத்திற்கும் வெளிப்படையாக இருக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நல்லிணக்கம் என்பதை ஒரே இரவில் கொண்டு வர முடியாது. இந்த நிலையில் இலங்கை அரசாங்கத்தின் நல்லிணக்க முயற்சிகளுக்கு ஐக்கிய நாடுகள் சபை தொடர்ந்தும் உதவும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
எனினும் பாதிக்கப்பட்டவர்களை நீதிக்காக காக்க வைத்துக் கொண்டு சமாதான முயற்சிகளை முடிவுக்கு கொண்டு வர முடியாது என்பதை அரசாங்கம் உணரவேண்டும் என்று அவர் எச்சரித்துள்ளார்.
குண்டுவீச்சால் பாதிக்கப்பட்டவர்கள், காணாமல் போனவர்கள் உறவினர்கள், மனித கேடயங்களாக பயன்படுத்தப்பட்டவர்கள் அழுகைக் குரல்களுடன் நீதியையும் உண்மையைதேடிக் கொண்டிருக்கிறார்கள் என்று பான் கீ மூன் தெரிவித்துள்ளார்.
இலங்கை அரசாங்கமும் ஐக்கிய நாடுகள் சபையும் இணைந்து அபிவிருத்தி தொடர்பில் முயற்சிகளை மேற்கொண்டுள்ளன.
எனினும் நல்லிணக்கம் மற்றும் சமாதானத்தை கொண்டு வராமல், பொருளாதார அபிவிருத்தியைகாண முடியாது என்றும் மூன் வலியுறுத்தியுள்ளார்.
You may like this video