11-வயது சிறுவனின் அபார முயற்சி 15-ல் நிறைவேறியது!
கனடா-31 சிஎன் கோபுரங்களின் உயரம் அல்லது பூரண வளர்ச்சியடைந்த ஐந்து ஆபிரிக்க யானைகளின் எடை அளவிலா ஒரு சத நாணயங்களை டர்ஹாம் பிரதேச Uxbridgeஐ சேர்ந்த வாலிபன் சேர்த்துள்ளான். இவன் சேர்தது குவித்த நாணயங்கள் 10-மில்லியன் பென்னிகள் அல்லது 100,000 டொலர்கள் ஆகும்.
மனித வாழ்விடம் ஒன்றிற்காக இத்தொகையை இவன் சேர்த்துள்ளான்.
சேகரிக்க ஆரம்பித்த போது தனக்கு வயது 11 என தெரிவித்த ஜோஷ் மொரிசன் என்ற இவ்வாலிபன் சேர்த்தது எவ்வளவென தெரியாதென கூறினான்.
தற்போது இவனிற்கு வயது 15.
இவனின் அர்ப்பணிப்பை நினைத்து ஏங்கி போனதாக டர்ஹாம் மனித நேய வசிப்பிட தலைமை நிர்வாக அதிகாரி மேரி போன் தெரிவித்தார்.
தனது முயற்சியில் இருந்து பின்வாங்காது இலக்கை அடைய ஜோஷ் முயற்சி செய்ததையிட்டு தாங்கள் பெருமையடைவதாக இவனது பெற்றோர் தெரிவித்தனர்.
ஒசாவாவில் தற்சமயம் கட்டப்பட்டு வரும் ரவுன் ஹவுஸ் தொடர்களில் ஒன்றிற்கு இப்பணம் செல்லும் என தெரிவிக்கப்பட்டது.
எதிர்வரும் 2017 கிறிஸ்மஸ் தினத்தன்று ஜோசுவின் பென்னி வீட்டின் சாவி வழங்கப்பட உள்ளது.