காதல் – காமெடி படம் இயக்க செளந்தர்யா ரஜினிகாந்த் திட்டம்
ரஜினிகாந்த், தீபிகா படுகோன், சரத்குமார், ஜாக்கி ஷெராப் உள்ளிட்ட பலர் நடிப்பில் செளந்தர்யா ரஜினிகாந்த் இயக்கிய படம் ‘கோச்சடையான்’. முழுக்க மோஷன் கேப்சர் தொழில்நுட்பத்தில் தயாரான முதல் இந்திய படம் ‘கோச்சடையான்’ என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை.
அதற்குப் பிறகு தனது அடுத்த படத்தின் பணிகளில் மூழ்கினார் செளந்தர்யா ரஜினிகாந்த். தற்போது முழுக்க காதல் கலந்த காமெடி கதை ஒன்றை எழுதி முடித்திருக்கிறார். தற்போது அப்படத்தில் நடிக்கும் நடிகர், நடிகைகள் தேர்வு நடைபெற்று வருகிறது.
இக்கதையில் தனுஷ் நடிக்கவிருப்பதாக வெளியான செய்திகளுக்கு செளந்தர்யா ரஜினிகாந்த் மறுப்பு தெரிவித்திருக்கிறார். இப்படத்தின் குழு முடிவானவுடன் முறையாக அறிவிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.