கார்த்தி – வினோத் பட ஷூட்டிங் டிசம்பரில் தொடக்கம்
‘காஷ்மோரா’ படப்பிடிப்பு முடிவுற்றதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் உருவாகி வரும் ‘காற்று வெளியிடை’ படத்தில் நடித்து வருகிறார் கார்த்தி. அதிதி ராவ், ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் கார்த்தியுடன் நடித்து வருகிறார்கள். சுமார் 60% படத்தின் படப்பிடிப்பு இதுவரை முடித்திருக்கிறார் கார்த்தி.
அக்டோபர் மாதத்துக்குள் ‘காற்று வெளியிடை’ படத்தின் முழு பணிகளையும் முடித்துக் கொடுக்க இருக்கிறார் கார்த்தி.
அதனைத் தொடர்ந்து ‘சதுரங்க வேட்டை’ வினோத் இயக்கும் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார் கார்த்தி. எஸ்.ஆர்.பிரபு தயாரிக்க இருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் துவங்க இருக்கிறது.
‘சிறுத்தை’ படத்தைத் தொடர்ந்து மீண்டும் இப்படத்தில் போலீஸ் உடை அணியவிருக்கிறார். விரைவில் தலைப்பு மற்றும் கார்த்தியுடன் நடிக்கவிருப்பவர்கள் யார் என்பதை அறிவிக்க படக்குழு திட்டமிட்டுள்ளது.