கனடா-வன்கூவர், 100-வயதுடைய இந்திய ஓட்டக்காரரான மன் கவுர் வன்கூவரில் இடம்பெற்ற அமெரிக்க முதுநிலை 100-மீற்றர்கள் ஓட்டப்பந்தயத்தில் தனது இறுதிக் கோட்டை வெற்றிகரமாக தாண்டியதும்–இரண்டு தசாப்தங்கள் இளையவர்களான இவரது போட்டியாளர்கள்– அவரை உற்சாகப்படுத்த அங்கு குழுமினர்.
கவூரின் ஆற்றல் மற்றும் போட்டியிட உந்துதலும் இந்த சர்வதேச தனிப்பட்ட போட்டியில் பங்கு பற்றுபவர்களிற்கு கடந்த 30ஆண்டுகளிற்கும் மேலாக ஒரு உத்வேகத்தை கொடுத்துள்ளதென இவரது மகன் தெரிவித்தார்.
கவுர் தனது 93வது வயதில் அவரது மகனின் யோசனையுடன் பந்தயத்தில் கலந்து கொண்டார்.
இது வரை 20-பதக்கங்களை வென்றுள்ளார். இந்த வாரம் 3-தங்கப்பதக்கங்களை வென்றுள்ளார்.
நீண்ட வாழ்க்கைக்கு ஒரு திட்ட உணவும், அதிக உடற்பயிற்சியும் முக்கியமென தெரிவித்தார்.