10 இலட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான வலம்புரிச் சங்குகளுடன் சந்தேக நபரொருவர் கனேமுல்ல பொலிஸாரால் இன்று திங்கட்கிழமை (03) கைது செய்யப்பட்டுள்ளார்.
கனேமுல்ல பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் கனேமுல்ல நகரத்தில் அருகில் சந்தேகத்திற்கிடமான முறையில் பயணித்த கார் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட சோதனையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஹோமாகம பிரதேசத்தில் வசிக்கும் 40 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 10 வலம்புரிச் சங்குகள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இனந்தெரியாத நபரொருவரினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இணங்க, வலம்புரிச் சங்குகளை விற்பனை செய்வதற்காக காரில் சென்றதாக சந்தேக நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரை கம்பஹா நீதவான் நீதிமன்றில் நாளை செவ்வாய்க்கிழமை (04) ஆஜர்படுத்த கனேமுல்ல பொலிஸார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.