1 மணி நேரத்தில் ரூ. 1 கோடி வாங்கிய பிரபல நடிகை? அதிர்ச்சியில் மற்ற நடிகைகள்
நடிகைகள் இப்போதெல்லாம் நடிகர்களுக்கு இணையாக எப்படியாவது சம்பாதித்து விடவேண்டும் என தீவிரமாக உள்ளார்களாம்.
இதற்காக அவர்கள் எடுக்கும் பல விதமான முயற்சிகளில் ஒன்று சில மணிநேரங்களில் ஆடிவிட்டு படத்தில் நடிப்பதற்கு இணையாக சம்பளம் வாங்கிவிடுவதுதான்.
நேரம் மிச்சம், பணமும் வருகிறது, புகழும் கிடைக்கிறது என இருக்கும் அவர்களில் இப்போது பிரபல தெலுங்கு நடிகை ராகுல் ப்ரீத் சிங்.
இன்று பெங்களூருவில் நடந்த பிரபல அரசியல் வாதியின் மகளின் திருமணம் 650 கோடி ரூபாய் செலவில் மிக ஆடம்பரமாக நடந்தது.
இதில் மேடை நடனமாடிய பிரீத்சிங்குக்கு 1 கோடி ரூபாய் சம்பளம் தரப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே ஸ்ருதிஹாசன், காஜல் அகர்வால் போன்ற நடிகைகள் பாடலுக்கு நடனம் ஆடிவிட்டு லட்ச கணக்கில் சம்பளம் வாங்குகின்றனர்.
அது போல சமீபத்தில் தமன்னா அவர்களை மிஞ்சி 1 கோடி வாங்கிய நிலையில் இப்போது ராகுல் ப்ரீத் சிங்கும் அதே தொகை வாங்கி இருப்பது பெரும் வியப்பாக இருக்கிறது.