“ஹாட்ரிக்” சாதனை படைத்த ஹேரத்: கதிகலங்கி போன அவுஸ்திரேலியா
அவுஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது டெஸ்டில் இலங்கை அணியின் சுழற்பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் ‘ஹாட்ரிக்’ சாதனை படைத்துள்ளார்.
இலங்கை- அவுஸ்திரேலியா அணிகள் மோதும் 2வது டெஸ்ட் காலே மைதானத்தில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் இலங்கை 281 ஓட்டங்கள் எடுத்தது.
இதன் பின்னர் தனது முதல் இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலிய அணி ஹேரத், தில்ருவான் பெரேரா ஆகியோரின் அபார பந்துவீச்சில் 106 ஓட்டங்களுக்கு சுருண்டது.
இருவரும் தலா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில் ரங்கன ஹேரத் முதன்முறையாக டெஸ்டில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை எடுத்து சாதனை படைத்தார்.
அவர் ஆடம் வோக்ஸ் (8), பீட்டர் நெவில் (0), மிட்செல் ஸ்டார்க் (0) ஆகியோரை அடுத்தடுத்து வீழ்த்தி ‘ஹாட்ரிக்’ விக்கெட்டை கைப்பற்றினார்.
இதன் மூலம் டெஸ்டில் இலங்கை அணிக்காக ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகள் வீழ்த்திய முதல் சுழற்பந்துவீச்சாளர் என்ற பெருமை பெற்றார்.
இதற்கு முன்னதாக 1999ல் இலங்கை அணியின் வேகப்பந்துவீச்சாளர் நுவான் சொய்சா நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் ‘ஹாட்ரிக்’ விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.