எஞ்சியுள்ள 18 மாதங்களையும் முன்கொண்டு செல்வதற்காக ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஐக்கிய தேசியக் கட்சிக்கும் இடையில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்படும் என ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளரும் அமைச்சருமான துமிந்த திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கத்துக்கு எஞ்சியிருக்கும் காலத்தை பொதுவான வேலைத்திட்டமொன்றின் அடிப்படையில் இணைந்து செயற்படுவது தொடர்பில் முடிவொன்றை எடுப்பதற்கு இரண்டு கட்சிகளையும் சேர்ந்த அமைச்சரவை குழுக்கள் செயற்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மே மாதம் 8 ஆம் திகதி கூடவிருக்கும் பாராளுமன்ற அமர்வில் இப்புதிய வேலைத் திட்டம் முன்வைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அவர் மேலும் கூறிப்பிட்டுள்ளார்.