ஸ்டம் செல்லினைப் பயன்படுத்தி செயற்கை இரத்தத்தினை உருவாக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள்!
மருத்துவ உலகில் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு புரட்சிகளுக்கு மத்தியில் தற்போது செயற்கை இரத்தம் உருவாக்கும் புரட்சியும் உள்வாங்கப்பட்டுள்ளது.
இவ் வகை இரத்தமானது இறப்படையாத ஸ்டெல் செல்களைப் பயன்படுத்தி உருவாக்கப்படவுள்ளது.
மேலும் இவ் இரத்தப் பரிமாற்றமானது எல்லையற்றதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன் மூலம் அரிய வகை இரத்தத்தினை செயற்கை முறையில் உருவாக்கிக்கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்த செயற்கை இரத்தத்தினை உருவாக்கும் முயற்சியில் ஐக்கிய இராச்சியத்தின் பிறிஸ்டல் பல்கலைக்கழக விஞ்ஞானிகளே ஈடுபட்டுள்ளனர்.
இவர்களது புள்ளிவிபரப்படி பிரித்தானியாவில் மட்டும் குருதி நன்கொடையாளர்களிடமிருந்து ஆண்டு தோறும் 1.5 மில்லியன் அலகு இரத்தம் பெற்றுக்கொள்ளப்படுகின்றது.
எனவே செயற்கை இரத்தம் உருவாக்கப்பட்ட பின்னர் குருதி நன்கொடையாளர்களிடமிருந்து குருதியை பெற்றுக்கொள்ள வேண்டிய அவசியம் காணப்படாது என்பது திண்ணம்.