ரொறொன்ரோ-ஸ்காபுரோRTக்குள் இடம்பெற்ற பாலியல் பலாத்கார சம்வம் தொடர்பாக பொலிசாரால் தேடப்படும் நபரின் பாதுகாப்பு கமரா படங்களை பொலிசார் வெளியிட்டுள்ளனர்.
ஏப்ரல் மாதம் 17ந்திகதி அதிகாலை 12.30மணிக்கு 18-வயது பெண் ஒருவர் கென்னடி நிலைய LRT மேடையில் காத்துக்கொண்டிருக்கையில் மனிதனொருவர் இப்பெண்ணை அணுகி கதைக்க தொடங்கியுள்ளான். கதைத்து கொண்டிருக்கையில் மனிதன் அப்பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக பொலிசார் குற்றம் சாட்டுகின்றனர்.
பெண் அவ்விடத்தை விட்டு அகன்ற சமயம் மனிதனும் தொடர்ந்து சென்று அதே ரயில் வண்டியில் ஏறியதாக கூறப்படுகின்றது.
சந்தேக நபரின் பாதுகாப்பு கமரா படத்தை பொலிசார் வெளியிட்டுள்ளனர்..
இந்நபர் 20ற்கும் 25வயதிற்கும் இடைப்பட்ட மெல்லிய தோற்றம் கட்டையான கறுப்பு முடி கொண்ட தோற்றம் உயைவர் எனவும் 5.8ற்கும் 5.10ற்கும் இடைப்பட்ட உயரம் மற்றும் கன்னத்தில் தாடியும் வைத்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடைசியாக காணப்பட்ட போது ஒரு சிவப்பு வெள்ளை கட்டம் போட்ட சேட் மற்றும் இருண்ட ஜீன்ஸ் அணிந்திருந்ததாக கூறப்பட்டுள்ளது.
தகவல் தெரிந்தவர்கள் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டு கொண்டுள்ளனர். தொடர்பு கொள்ள வேண்டிய இலக்கம் 416-808-4100 அல்லது அனாமதேயமாக கிரைம் ஸ்ரொப்பஸ் 416-22-TIPS(8477).