புதன்கிழமை காலை ஸ்காபுரோவில் இடம்பெற்ற பொலிஸ்-சம்பந்தப்பட்ட சூட்டுச்சம்பவத்தில் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட போது காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
பொலிஸ் பின்தொடர்கையில் பொலிஸ் அதிகாரி தனது துப்பாக்கியால் சுட்டதால் சந்தேக நபர் காயமடைந்துள்ளார்.
எக்லிங்ரன் அவெனியு கிழக்கு மற்றும் மேசன் வீதி பகுதியில் காலை 10.39 மணியளவில் பொலிஸ் அதிகாரி வாகனமொன்றை நிறுத்த முயற்சிக்கையில் வாகன சாரதி இறங்கி நடந்து ஓடிவிட்டார்.
சிறிது போராட்டத்தின் பின்னர் அதிகாரியால் சந்தேக நபரை பிடிக்க கூடியதாக இருந்தது.
ஒரு சந்தர்ப்பத்தில் சந்தேநபர் அதிகாரியை மீற முயன்றதால் அதிகாரி தோட்டா ஒன்றை வெளியேற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக கூறப்படுகின்றது. சந்தேக நபர் தோட்டாவால் பாதிக்கப்படவில்லை போராட்டம் காரணமாக சிறிது காயங்கள் ஏற்பட்டுள்ளது.
மேலதிக விபரங்கள் தெரியவரவில்லை.
விசாரனை தொடர்கின்றது.