பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் ஹிந்தி சினிமாவின் ஆல் டைம் பிஸி ஹீரோ. இவர் செய்திகளில் சிக்குகிறாரோ இல்லையோ இவரது மகள் சுஹானா அடிக்கடி ஹாட் டாப்பிக்காக பேசப்படுவார்.
சமீபத்தில் இவர் தன் தோழியை சந்திக்க வீட்டை விட்டு வெளியே வந்துள்ளார். பொதுவாக ஆடை சர்ச்சைகளில் பலர் சிக்குவார்கள். ஆனால் இவர் ஒரு விஷயத்திற்காக வித்தியாசமாக பேசப்பட்டுள்ளார்.பொது இடத்திற்கு வந்த அவர் காலில் வித்தியாசமான ஷூவை அணிந்துள்ளார்.
jennifer wedge sneakers என்னும் இந்த பிராண்டில் சுஹானா அணிந்துள்ள மாடல் ஷூவின் விலை ரூ 60,000 முதல் 1 லட்சம் வரை இருக்குமாம். இந்த போட்டோ தற்போது வைரலாகி வருகிறது. ஒரு அன்றாடங்காய்ச்சியின் ஆண்டு வருமானமே இவ்வளவுதான் இருக்கும். காலில் போடும் ஷூவுக்காக இவ்வளவு செலவு செய்வதை பலரும் விமர்சித்து வருகிறார்கள்.