நாடளாவிய ரீதியில் வைத்தியர்களினால் நாளை புதன்கிழமை (05) முன்னெடுக்கப்படவிருந்த பணிப்புறக்கணிப்பு கைவிடப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸவுடன் இன்று செவ்வாய்க்கிழமை (04) நடைபெற்ற கலந்துரையாடலில் வழங்கப்பட்ட வாக்குறுதிகளையடுத்தே பணிப்புறக்கணிப்பை கைவிட தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அரசாங்க வைத்திய அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.