ரொறொன்ரோ- மத்திய அரசாங்கத்தின் பணியமர்த்தல் நடைமுறைகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் வேலை விண்ணப்பதாரிகளின் பெயர்களை மறைக்கும் முயற்சியை சோதிக்கும் பரீட்சார்த்த திட்டம் இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.
பாரம்பரிய திரையிடல் முறையுடன் பெயர்-குருட்டு ஆட்சேர்ப்பு முடிவுகள் ஒப்பிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பரீட்சார்த்த முயற்சியில் மத்திய அரசின் ஆறு திணைக்களங்கள்-தேசிய பாதுகாப்பு, உலகளாவிய விவகாரங்கள் மற்றும் குடிவரவு அகதிகள் மற்றும் குடியுரிமை ஆகியன உட்பட்ட-அடங்கும்.
கண்டு பிடிப்புக்கள் குறித்த அறிக்கை அக்டோபர் மாதம் எதிர்பார்க்கப்படுகின்றது.
பொது சேவைகளில் பன்முகத்தன்மையை வளர்ப்பது மற்றும் சேர்ப்பதே இத்திட்டத்தின் கருத்தென அரசாங்கம் தெரிவித்துள்ளது. ஆனால் தற்போதைய ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் பக்கசார்பானவை என்ற எண்ணம் இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குருட்டு-பெயர் ஆட்சேர்ப்பு நடைமுறைகள் பல ஐரோப்பிய அமைப்புக்களில் நடைமுறையில் இருக்கின்றதெனவும் பிரிட்டிஷ் சிவில் சேவைகள் இத்தகையதாகும் எனவும் கூறப்படுகின்றது.
686 total views, 162 views today