வேதாளம் சாதனையை முறியடித்த பைரவா
பைரவா படம் மிகுந்த எதிர்ப்பார்ப்புடன் நேற்று வெளிவந்தது. படம் தற்போது வரை கலவையான விமர்சனங்களை சந்தித்து வருகின்றது.
இப்படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு என்பதே பலரின் கேள்வியாக இருந்தது, முன்னணி பாக்ஸ் ஆபிஸ் தளம் ஒன்று வெளியிட்டுள்ள தகவலில் முதல் நாளில் பைரவா ரூ 16.5 கோடி வசூல் செய்திருப்பதாக குறிப்பிட்டுள்ளனர்.
மேலும், வேதாளம் முதல் நாள் வசூல் ரூ 15.5 கோடி, ஆனால், பைரவா பண்டிகை தினம் இல்லாமல் சாதரண நாளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.