வெள்ளத்தில் சிக்கித் தவிக்கும் ஃபோர்ட் மக்முர்ரே
அண்மையில் கடுமையான காட்டுத்தீயினால் பாதிக்கப்பட்ட அல்பேட்டாவின் ஃபோர்ட் மக்முர்ரே பகுதி அதிலிருந்து மீண்டு வருவதற்குள் தற்போது வெள்ளத்தில் சிக்கித் தவித்து வருகின்றது.
தொடர்ச்சியாக பெய்யும் பலத்த மழையினால் குறித்த பகுதியில் வீதிகள் அனைத்தும் வெள்ளத்தில் மூழ்கியுள்ள நிலையில் வீதி விளக்குகளும் செயலிழந்து போயுள்ளன. அத்துடன் வெள்ளம் காரணமாக சில பிரதான வீதிகளும் மூடப்பட்டுள்ளது. இந்நிலையில் நகர பாதுகாப்பு ஊழியர்கள் வீதிகளில் தேங்கியுள்ள வெள்ளத்தை வெளியேற்றுவதற்கு முயற்சித்து வருகின்றனர்.
எனினும் குறித்த பகுதியில் தொடர்சியாக மழை பெய்யும் என கனேடிய சுற்றுச் சூழல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இந்நிலையில் வெளியிடங்களுக்கான பயணங்களை கட்டுப்படுத்துமாறு மக்களுக்கு நகராட்சி அறிவுறுத்தியுள்ளது.
அத்துடன் வீட்டின் அடித்தளத்தில் வைக்கப்பட்டுள்ள பெறுமதிவாய்ந்த பொருட்களை பாதுகாப்பான இடங்களில் வைக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.