ஆர்.கே நகரில் நடைபெறும் இடைத்தேர்தலுக்கான தங்கள் தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ் அணியினர் வெளியிட்டுள்ளனர்.
ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் ஓ.பி.எஸ் அணி சார்பில் மதுசூதனன் போட்டியிடுகிறார்.
அந்த தொகுதி மக்களுக்கென பிரத்யேகமாக 108 அம்சங்கள் கொண்ட தேர்தல் அறிக்கையை ஓ.பி.எஸ் வெளியிட்டுள்ளார்.
அதன் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
- ஆர்.கே.நகரில், 18 வயதுக்கு மேற்பட்ட இளைஞர்களுக்கு தொழில்பயிற்சி அளிக்கப்படும்.
- அனைவருக்கும் பட்டா, தடையின்றி மின்சாரம், பாதுகாப்பான குடிநீர் வழங்கப்படும்.
- முதியோருக்கு தடையின்றி ஓய்வூதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்
- 500 ரேஷன் கார்டுகளுக்கு ஒரு நியாயவிலைக்கடை கொண்டு வரப்படும்.
- எழில் நகரில் சுற்றுலா மையம் அமைக்கப்படும்.
- தரமான சாலை, பாதுகாப்பான சாக்கடை வசதிகள் செய்து தரப்படும்.