வெளிநாட்டு நீதிபதிகள் குறித்து பான் கீ மூன் பேசுவார்..!
இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஐக்கிய நாடுகளின் செயலாளர் பான் கீ மூன், இலங்கையில் போர் குற்றங்களுக்கான உள்நாட்டு விசாரணையில் வெளிநாட்டு நீதிபதிகளை உள்ளடக்கும் விடயம் குறித்து கலந்துரையாடுவார் என ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளரின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நியூயோர்க்கில் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர்,நீதி மற்றும் பொறுப்புக்கூறல் விடயங்கள் குறித்தும் இலங்கை தலைவர்களுடன் பான் கீ மூன்கலந்துரையாடுவார் என குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் மற்றும் அபிவிருத்தி என்பவை தொடர்பில் பான் கீ மூன் செய்தியை விடுக்கவுள்ளார்.
அதேநேரம் இலங்கை மக்களுக்கு ஐக்கிய நாடுகள் சபை உதவும் திட்டம் குறித்தும் அவர் அறிவிப்பார் என்று டுஜாரிக் மேலும் தெரிவித்துள்ளார்.