வெல்லப்போவது யார்? Scarborough-Rouge River தொகுதியின் இடைத் தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டது.
ஒன்ராறியோ Scarborough-Rouge River தொகுதியின் இடைத் தேர்தல் தினமாக September மாதம் முதலாம் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நான்கு மாதங்கள் வெற்றிடமாகவுள்ள மாகாணசபை உறுப்பினர் பதவிக்கான இடைத் தேர்தல் திகதியை நேற்று ஒன்ராரியோ மாகாண முதல்வர் Kathleen Wynne அறிவித்தார்.
புதிய ஜனநாயகக் கட்சி தனது வேட்பாளராக நீதன் சானை தெரிவு செய்துள்ளது. புறோகிறசிவ் கொன்சவேட்டிவ் கட்சியின் வேட்பாளராக றேமன்ட் சோவும். லிபரல் கட்சி வேட்பாளராக பிரகால் திருவும் போட்டியிடுகின்றனர்
தமிழர்கள் செறிந்து வாழும் இத் தொகுதியில் கட்சித்தலைவர்கள் தமிழர்களின் வர்த்தகநிலையம் தொடக்கம் , ஊர்ச்சங்க ஒன்று கூடல் வரை சென்று வாக்கு கேட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்