வெறியாட்டம் நடத்திய புகலிடக் கோரிக்கையாளர்கள்!
ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்கள் மையத்தில் வைத்து 10க்கும் மேற்பட்டோர் வெறியாட்டம் நிகழ்த்திய வீடியோ காட்சி பேஸ்புக்கில் வெளியிடப்பட்டு வைரலாக பரவி வருகிறது.
Dortmund- இன் புகலிடக்கோரிக்கையாளர்கள் மையத்தில் உள்ள காத்திருப்பு அறையில் (Waiting Room) வைத்து ஆண்களும், பெண்களும் ஒருவரையொருவர் மிக மோசமாக தாக்கி கொள்கின்றனர்.
அந்த அறையில் உள்ள நாற்காலியை எடுத்து ஒருவர் தலையில் மற்றொருவர் போடுவதும், அங்கிருக்கும் நாற்காலியை உடைப்பதும் என மாறி மாறி தாக்கிகொண்டு சத்தம்போட்டு அலறுகின்றனர்.
இந்த தாக்குதல் சம்பவத்தில் 14 முதல் 37 வயதுக்குட்பட்ட நபர்களே ஈடுபட்டுள்ளனர். காத்திருப்பு அறையில் இந்த புகலிடக்கோரிக்கையாளர்கள் காத்திருந்த போது, இவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக ஒருவரையொருவர் தாக்கி வெறியாட்டம் நடத்தியுள்ளனர் என தெரியவந்துள்ளது.
இதில், 33 வயது மதிக்கத்தக்க பெண் மற்றும் 4 நபர்கள் காயமடைந்துள்ளனர், இவர்கள் 5 பேரும் உள்ளூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.
மேலும், இளம் வயது நபர்கள் 3 பேர் இந்த தாக்குதல் சம்பவம் குறித்த விசாரணை நடத்துவதற்காக காவல் நிலையம் அழைத்துசெல்லப்பட்டு தற்போது விடுவிக்கப்பட்டுள்ளனர்.
ஜேர்மனியில் வன்முறை சம்பவங்கள் நடப்பது அதிகரித்து வருகிறது என்று பொலிசார் கூறியுள்ளனர், இதற்கு முன்னர் ரயில் நிலையம் மற்றும் Ansbach நகரில் புகலிடக்கோரிக்கையாளர்கள் தாக்குதல் நடத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.