வெண்ணிலா கபடி குழு இரண்டாம் பாகத்தை சுசீந்திரன் இயக்கவில்லை- ஏன்?
பிரபல நடிகர் விஷ்ணு நடிப்பில் இயக்குனர் சுசீந்திரனின் முதல் படமான வெண்ணிலா கபடி குழு திரைப்படம். இப்படத்தின் மூலம் அறிமுகமான விஷ்ணுவிஷால், சூரி, அப்பு குட்டி போன்ற நடிகர்கள் தமிழ் சினிமாவில் இன்று தங்களுக்கென ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாகத்தை எடுக்கப்போவதாக இயக்குனர் சுசீந்திரன் அறிவித்துள்ளார். விக்ராந்த் கதாநாயகனாக நடிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குநர் செல்வசேகரன் இயக்க சாய் அற்புதம் சினிமாஸ் தயாரிக்கிறது.
வெண்ணிலா கபடி குழு’ போன்றே இப்படமும் கபடியை மையமாகக்கொண்டு உருவாகிறது. இதில் விக்ராந்துக்கு ஜோடியாக புதுமுகம் அர்த்தனாவும் முக்கிய வேடங்களில் பசுபதி, சூரி, அப்புக்குட்டி, கிஷோர், ரவி மரியா, யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இதன் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது. முதலில் இப்படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்குவதாக இருந்தது, ஆனால் அடுத்தது அவருக்கு படங்கள் கமிட்டானதால் இப்படத்தை இயக்க முடியாமல் போனதாக தகவல்