நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் காதலிக்கிறார்களா இல்லையா என்பதை அவர்களைத் தவிர மற்றவர்கள் பேசி வருகிறார்கள். ஆனாலும், நயன்தாராவுடன் கொஞ்சம் நெருக்கமாக இருக்கும் பல படங்களை இயக்குனர் விக்னேஷ் சிவன் தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகிறார்.
இன்று நள்ளிரவில் நயன்தாராவுடன் கிறிஸ்துமஸ் கொண்டாடியதை ஒரு செல்பியுடன் டுவிட்டரில் பகிர்ந்திருக்கிறார். அந்த புகைப்படத்தில் நயன்தாரா நிறையவே வெட்கப்பட்டுக் கொண்டு போஸ் கொடுத்திருக்கிறார்.
“14வது ஆண்டு நயனிசம், இன்னும் சக்தியும் வெற்றிகளும் கிடைக்க வாழ்த்துகள் நயன்தாரா. அதிகமான கடவுளின் அருளுடன் ஒரு அன்பான நாள். அற்புதமான கிறிஸ்துமஸ் நாள்,” என நயன்தாராவுக்கு வாழ்த்து சொல்லிவிட்டு அப்படியே அவர் இயக்கத்தில் வெளிவர உள்ள ‘தானா சேர்ந்த கூட்டம்’ படம் பற்றி தாவியுள்ளார் விக்னேஷ் சிவன்.
“பீலா பீலா… பாடலுக்கு அளவுக்கதிமான அன்பு, ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தின் அடுத்த சிங்கிள்கள், பாடல் டீசர் மற்றும் பல வருகிறது,” எனவும் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா சினிமாவில் முதன் முதலாக நடிகையாக அறிமுகமான ஆண்டு 2003. அந்த ஆண்டில் டிசம்பர் 25ம் தேதி அவர் நடித்த ‘மனசினக்கரே’ படம் வெளிவந்தது. அதனால் தான் ’14 ஆண்டு நயனிசம்’ என விக்னேஷ் சிவன் குறிப்பிட்டுள்ளார். அவரைத் தவிர வேறு யாரால் இப்படி ஒரு கொண்டாட்டத்தைக் கொண்டாட முடியும்.