வெடித்துச் சிதறிய எரிமலை: உயிருக்கு பயந்து அலறி அடித்து ஓடிய பிபிசி குழுவினர், சுற்றுலாப்பயணிகள்
இத்தாலியில் உள்ள எரிமலை ஒன்று வெடித்துச்சிதறிய போது எதிர்பாரதவிதமாக அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பிபிசி குழுவினர் மீது மலையில் இருந்த சிறியகற்கள் அவர்கள் மீது விழுந்ததால், காயங்களுடன் உயிர்பிழைத்துள்ளனர்.
இத்தாலியைச் சேர்ந்த சில்சிலியில் எட்னா என்ற எரிமலை உள்ளது. அங்கு சுற்றுலாப்பயணிகள் மற்றும் பிபிசி குழுவினர் சென்றுள்ளனர். அப்போது அந்த எரிமலை வெடித்து புகைகளை வெளியிட்டுள்ளது.
இதை பிபிசி குழுவில் உள்ள கேமராமேன் ஒருவர் அதை வீடியோ எடுத்துக்கொண்டிருந்த போது அந்த எரிமலை அதிக அளவில் வெடித்துள்ளது. அப்போது மலையில் இருந்த சிறியகற்கள் மேலே பறந்து அங்கிருந்த சுற்றுலாப்பயணிகள் மற்றும் பிபிசி குழுவினர் மீது விழுந்துள்ளது.
இதனால் அங்கிருந்தவர்கள் அலறி அடித்து ஓடியுள்ளனர். அப்போது சிலருக்கு இரத்தம் வரும் அளவிற்கு காயங்கள் ஏற்பட்டுள்ளது. இதனால் அவர்கள் உடனடியாக அங்கிருந்த மீட்புகுழுவினர் மூலம் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
இதில் 78 வயது மூதாட்டி ஒருவருக்கு மட்டும் பலத்தகாயம் ஏற்பட்டுள்ளதாகவும், குறைந்த பட்சம் 10 பேருக்கு காயங்கள் ஏற்பட்டிருக்கும் என்று கூறப்படுகிறது.