வெகுசிறப்பாக நடந்து முடிந்த ஜார்விஸ் கால்பந்தாட்ட போட்டிகள் 2016
டொரோண்டோ ஜார்விஸ் (Jarvis) விளையாட்டு கழகத்தின்2016 ஆம் ஆண்டின் காற்பந்து சுற்றுப்போட்டி 23-07-2016 மிக சிறப்பாக ஸ்காபரோவில் அமைந்துள்ள L’Amoreaux Sports Complex விளையாட்டுத்திடலில் நடைபெற்றது.
இப்போட்டியில் 6, 8 , 10, 12, 14 வயது மற்றும் பெரியவர்களின் போட்டி என 44 தமிழ் அணிகளுக்கிடையேயான போட்டிகள் இடம்பெற்றது.
தாயக நினைவுகளையும் தமிழர் அடையாளங்களையும் நம் அடுத்த தலைமுறைக்கு எடுத்து செல்வதோடு நம் இளையவர்களது காற்பந்து ஆற்றலை வளர்ப்பதாகவும் அமைந்தது.
இம் முறை ஐரோப்பாவில் இருந்து பல தமிழ் விளையாட்டு வீரர்கள் வந்து கலந்துகொண்டது இப்போட்டிக்கு வலு சேர்த்திருந்தது குறிப்பிடத்தக்கது.